ஆன்டான்று காலமாக எமது தேசத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் பின்னிப் பினைந்து வாழ்து வருகின்றார்கள்.இந்த உறவினை ஒரு சில தீயசக்திகள் மலினப்படுத்துவதற்காக இன முறுகலை ஏற்படுத்தி வருகிறார்கள்.சிங்களவர்கள் பெரும்பாண்மையாக வாழ்ந்து வரும் இடங்களில் எல்லாம் முஸ்ஸிம்களும் குடிகொண்டு இருக்கின்றார்கள்.
அவர்கள் எப்போழுதும் அன்யோன்யமாக ஒற்றுமையாகவும் வாழ்ந்து வரும் இந்த காலகட்டத்தில் எமது இலங்கை தேசத்தை பாதுகாப்பதற்காக நாம் ஒற்றுமை எனும் கயிற்றைபற்றிப் பிடிக்கவேண்டும். சிறு சிறு சம்பவங்கள் ஏற்படுத்தி அதை பூதாகரமாக கொண்டுவந்து நாட்டுக்கே அபகீர்த்தியை ஏற்படுத்துவது முறையானதல்ல.
எமது கண்டி நிருவாக மாவட்டத்தில் அனணத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள். தேர்தல் காலங்களிலும் கூட சிங்களமக்கள் எங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.அவர்களுக்காக அடிப்படை வசதிகளை மற்றும் தேவையான வசதிவாய்புக்களை நாங்கள் பெற்றுக் கொடுக்கின்றோம். இன ரீதியான உறவினை எப்பொமுதும் நாங்கள் பாதுகாத்துவாருகின்றோம்.
நாடுபூராகவும் அனைத்து இன மக்களும் ஒன்றடக் கலந்து வாழ்ந்து வாருகின்றார்கள் அதிலும் குறிப்பாகசிங்கள முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாக அதி கூடியவிருப்பத்தோடு வாழ்வதைநாங்கள் கானக் கூடியதாக உள்ளது. சிங்களவர்களை நாங்கள் ஒருபோதும் எதிரியாக பார்க்க கூடாது. அதேபோல் முஸ்லிம்களை சிங்களவர்கள் எதிரியாக எப்போதும் பார்க்க இடமளிக்க கூடாது.
இனங்களுக்கிடையிலான முறுகள் நிலையை அரசியல் இலாபத்துக்காகவும் ஒரு சில தீயசக்திகள் கொண்டு வருவதாக நாங்கள் அறிகிறோம். இதை முறியடித்து இப்படியான முறுகள்நிலை ஏற்படுத்திவரும் தீயசக்திகள் இருந்தலும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் அனைத்து விடையங்களையம் நான் எடுத்து கூறியுள்ளேன். அவர் உறுதிமொழி தந்துள்ளார் இனவாதத்தை ஏற்படுத்துவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். எனவே நாம் பொறுமையாக இருந்து இனவாதத்தை அடியோடு ஒழிக்க முன்வரவேண்டும். என கூறினார் அமைச்சர் ஹலீம்.