நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டு வருகின்ற வன்முறைகளை கண்டிக்கும் நோக்கோடு ஏறாவூரில் முதலாம் குறிச்சி பள்ளிவாயலில் இருந்து பொலிஸ் சந்தி வரை வர்தகர்கள் அணைவரும் தங்களது வர்தக நிலையங்களை மூடியும் பிரதான வீதியின் ஓரமாக பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் மனித சங்கிலி பேரணி சில வாசங்கள் ஏந்திய பாதாதையுடன் சென்றனர்.
இப்பேரணி முடிவில் சம்மேளனத் தலைவர் சில கருத்துக்களை ஊடகங்களுக்கு முன்வைத்தார்.
அவர் உரையாற்றுகையில்
பல்வேறு வன்முறைகள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்தப்படுவதை கண்டித்து இந்த மனித சங்கிலி போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நாட்டிலே முஸ்லிம்கள் பூர்வீக குடிகள் என்பதனை இந்த நாட்டின் அரசாங்கம் மற்றும் ஏனைய சகோதர இனமும் புரிந்துகொள்ள வேண்டும்
இந்த நாட்டின் வளர்சியில் நாட்டின் அபிவிருத்தியில் முஸ்லிம்கள் அதிகளவிலான பங்களிப்பு செய்துவருகின்றமை யாவரும் அறிந்த விடயம்.
இந்த நாட்டின் பாதுகாப்பு படையில் முதன்முதலாக நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தது ஒரு முஸ்லிம் சகோதரர் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் மேலும் இன் நாட்டுக்கு அன்னியசிலாவனியை எற்படுத்தி இந்த நாட்டை சர்வதேசமயப்படுத்துவதில் இலங்கை முஸ்லிம்களுக்கு பாரியதோர் கடமைப்பாடு உள்ளது அதனை கடமையாக நிரைவேற்றியும் வருகின்றனர்.
இதனை இந்த நாட்டின் பெரும்பான்மை இன சகோதரர்கள் அறிய வேண்டும்
எனவே இவ்வாறான வன்முறைச்சம்பவங்களையும் இனவாதங்களையும் தூண்டி நாட்டி குட்டிச்சுவராக்க துடிக்கும் சில விசமிகளுக்கு இடமளிக்காது
ஒற்றுமையோடு வாழ்வோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக ஏறாவூர் சம்மேளனமும் இளைஞர்களும் தங்களது ஆதரவை வழங்கிதங்களது அனுதாபங்களை தெரிவித்தனர்.