பிரதி அமைச்சர் ஹரீஸ் ஒலுவில் கூட்டத்தில் பிரதமரிடம் கடும்தொனியில் பிரச்சினைகளை விபரித்தார்.


அகமட் எஸ். முகைடீன்-
ணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு பிணையில் வர முடியாத வகையில் மிகக் கடுமையான தண்டனையினை வழங்கக் கூடியதொரு புதிய சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் அம்பாறைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குவதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமரின் ஒலுவில் விஜயத்தின்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீசின் வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பில் பிரதமரும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை (04) ஒலுவிலுக்கு விஜயம் செய்து அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை ஒலுவில் சுற்றுலா விடுதியில் சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கயளான ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமரிடம் கடும்தொனியில் பிரச்சினைகளை விபரித்து உரையாற்றுகையிலேயே மேற்குறித்த வேண்டுகோளை விடுத்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு விபரிக்கையில் அம்பாறைச் சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவ தினத்திற்கு அடுத்தநாள் (27) செவ்வாய்க்கிழமை காலை அம்பாறை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பௌத்த மதகுருமார்கள் வர்த்தக சங்க பிரதிநிதிகள் எனப் பலரதும் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்தில் குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கடுமையான முறையில் தண்டிப்பதாக பொலிசார் வாக்குறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து இப்பிரச்சினைக்குரிய நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்கும் என்ற நம்பிக்கை எம்மத்தியில் ஏற்பட்டது.

அதேநேரம் அம்பாறைச் சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் கொதிப்படைந்து மிலேச்சத்தனமான இச்செயலைக் கண்டித்து ஹர்த்தால் மற்றும் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட தயாராகினர். இச்சந்தர்ப்பத்தில் பள்ளிவாசல் நிர்வாகங்கள், உலமாக்கள் உள்ளிட்ட நாங்கள் அனைவரும் சேர்ந்து அரசாங்கம் இதற்கு தகுந்த கடுமையான நடவடிக்கை எடுக்குமென்று இளைஞர்களை அமைதி காத்தோம்.

அம்பாறை மாவட்ட மக்கள் பொதுவாக வெளியூர்களில் உதாரணமாக தம்புள்ளை, அளுத்கம போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சினை வருகின்றபோது முதல் முதலாக ஹர்த்தால் மற்றும் ஆர்ப்பாட்டம் என்று எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றவர்களாகும். அப்படியான ஒரு மாவட்டத்தில் பாரிய சம்பவமொன்று நடைபெற்றுள்ளபோது அதற்காக ஹர்ததால் மற்றும் ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தாமல் பொறுமை காத்தமைக்கு காரணம் அரசாங்கம் இச்சம்பவத்துடன் தொடர்டபுடைய குற்றவாளிகளுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எமக்க ஏற்பட்டதாலேயாகும். ஆனால் பொலிசார் கைதுசெய்தவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு உதவி செய்துள்ளனர்.

குற்றவாளிகள் பிணையில் செல்ல அனுமதித்தமை மற்றும் அம்பாறைச் சம்பவத்தை உரிய நேரத்திற்கு பொலிசார் கட்டுப்படுத்த தவறியமை போன்ற காரணங்களினால் இன்று அம்பாறையில் முஸ்லிம் இளைஞர்கள் கொதிப்படைந்து அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்து கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றனர். இதுவே இன்றைய நிலமையாக உள்ளது.

அத்தோடு நாடு பூராகவுமுள்ள முஸ்லிம்கள் பயத்திலும் பீதியிலும் உள்ளனர். தங்களுக்கும் இந்நிலமை வரலாம் என்று அச்சப்படுகின்றனர். இதனால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் என்னுடன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு இதற்கு ஒரு தீர்க்கமான முடிவை அரசுடன் பேசி எடுக்குமாறு கூறுகின்றார்கள்.

எனவே இந்நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களின் பயத்தையும் பீதியையும் போக்குவதற்கான கடமை உங்களுக்கு இருக்கின்றது என்பதால் இதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும்.

இந்நாட்டில் காணப்படும் முஸ்லிம் பள்ளிவாசல்கள், பௌத்த விகாரைகள், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் போன்ற வனக்கஸ்தலங்கள் இவ்வாறு தாக்கப்படுவதற்கு சம்பந்தப்படுகின்றவர்கள் பிணையில்வர முடியாத மிகவும் கடுமையான தண்டனையை வழங்கக் கூடிய ஒரு புதிய சட்டத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதன் ஊடாக இவ்வாறான பிரச்சினைகளை அடக்க வேண்டும்.

அதேநேரம் அம்பாறைச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அழிப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக மக்களும் நாங்களும் கடும் அதிருப்தியில் இருக்கின்றோம். எனவே பிரதமரின் இவ்விஜயத்தின் ஊடாக இம்முடிவுகளை நாங்கள் எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

அதேநேரம் பள்ளிவால் பிரதிநிதிகள் மற்றும் சம்பவத்திற்கு ஆஜரான சட்டத்தரணிகள் பொலிசார் விட்ட தவறுகளை ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டி இங்கு பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -