ஈ.பி.டி.பியை புனிதமாக்கிய கூட்டமைப்பு


பாறுக் ஷிஹான்-
.பி.டி.பி கட்சி ஒட்டுக்குழு என்றும், யுத்தக் குற்றம் புரிந்தவர்கள் என்றும், தமிழ் உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள் என்றும் மீது பெய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வீன்பழி சுமத்திவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க எங்களை நாடயுள்ள நிலையில் அப் பொய் குற்றச்சாட்டுக்களில் இருந்து எங்களை விடுவித்துள்ளது.

இதன் ஈ.பி.டி.பி கட்சியும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தான் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது என்பதே வெளிப்படையான உன்மை.

இவ்வாறு ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களான மு.ரெமிடியஸ், வி.குபேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(30) முற்பகல் இருவருடைய ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-

உள்ளுராடசி மன்றங்களின் சில சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி கட்சி ஆதரவு வழங்கியதை வைத்து அவர்களுடன் எமது கட்சி கூட்டாட்சி அமைத்துவிட்டது என்று என்ன வேண்டாம். ஈ.பி.டி.பி கட்சியானது எப்போதும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாது. தொடர்ந்தும் அதன் கொள்கையின் வழியிலேயே பயணிக்கும்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஈ.பி.டி.பி மீது வசை பாடுவதே வேலையாக செய்பவர்கள். இதனை எமது கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பல தடைவ கூறியுள்ளார்.
ஈ.பி.டி.பி மீது யுத்தக்குற்றம், ஒட்டுக்குழு, தமிழ் உறவுகள் காணாமல் போகச் செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் என்று ஈ.பி.டி.பி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஊள்ளுராடசி மன்றங்கிளில் ஆட்சி அமைப்பதற்கு எமது கட்சியின் ஆதரவினை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஈ.பி.டி.பியும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தான் என்பதை ஏற்றுக் கொண்டு, இதுவரை காலமும் ஈ.பி.டி.பி கட்சி மீது சுமத்திவந்த பெய்யான குற்றச்சாட்டுக்களில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களை விடுவித்துள்ளது. நாமும் தூய்மையான கரங்களை உடையவர்கள் தான் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளது என்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -