ஏறாவூர்- தாமரைக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவரை கடந்த 01.03.2018 வியாழக்கிழமை தொடக்கம் காணவில்லையென ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இவர் பயன்படுத்திய துவிச்சக்கர வண்டி குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாயலத்தில் தரம் 6 வகுப்பில் கல்வி கற்றுவந்த 13 வயதுடைய அ. முகம்மது இர்ஷாத் என்பரே காணாமல் போனவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விட்டு வீட்டிற்கு வந்த இவர், மதரசாவிற்குச் செல்வதற்காக நீளமான மேற்சட்டை மற்றும் தலைப்பாகை அணிந்துகொண்டு பைசிக்கிளில் சென்றுள்ளார். மீண்டும் வீடுதிரும்பவில்லை என பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏறாவூர் குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தனது பைசிக்களை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு தான் பஸ்வண்டி மூலம் காத்தான்குடி செல்லப்போவதாக கூறிச்சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனினும் இதுவரை அவரைக் கண்டுபிடிக்காது தேடிவருவதாக பெற்றார் கூறிகின்றனர்.