இலங்கையில் பேஸ்புக் முடக்கம் தொடர்பில் அரசிடம் அவகாசம் கோரும் நிறுவனம்

லங்கை அரசாங்கத்திடம் பேஸ்புக் நிறுவனம் கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இனவாதத்தை தூண்டும் கருத்துக்கள் உள்ள பதிவுகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கம் பேஸ்புக் நிறுவனத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் பதிலளிக்கும் போதே பேஸ்புக் நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

சிங்கள மொழி பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக குறித்த கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள மொழி அறிவுகொண்ட போதுமானளவு பணியாளர்கள் தற்போது தமது நிறுவனத்தில் இல்லை எனவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

அதேவேளை பேஸ்புக் மீதான தடை அரசியல் சார்ந்த விடயம் அல்ல, இனவாதத்தை தூண்டும் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையான பதிவுகளை தொடர்ந்து இடம்பெற அனுமதிக்க முடியாது. இந்தவிடயத்தில் பேஸ்புக் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. அந்த நிறுவனம் வழங்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த தடையை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.dailyceylon
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -