தொழிலதிபர் கிதுறு மாஸ்டரே அட்டாளைச்சேனையின் தவிசாளர்



அபு மபாஸ்-

தொழிலதிபர் கிதுறு மாஸ்டரின் சொந்த நிதியினால் மீனோடைக் கட்டு பள்ளிவாயல் சுற்றுமதில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

பலவருட தேவையாக அக்கிராம மக்களால் எதிர்பார்க்கப்பட்டிருந்த பள்ளிவாயலுக்கான சுற்று மதிலினை கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக எதிர்பார்க்கப்படும் கிதுறு முகம்மட் (கிதுறு மாஸ்டர்) நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.

இனிமேல் எனக்கு எதுவுமே வேண்டாம் எல்லாமே நான் தொழில் செய்து சேர்த்து வைத்துள்ளேன் மீதமுள்ள மரணிக்கும் வரை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்குடன் அரசியலுக்குள் நுளைந்துள்ள கிதுறு மாஸ்டர் அரசியலில் ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குவார் என்று கல்வியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் தன்னிடம் இருக்கும் நிதியில் இருந்து பாரிய சேவைகளை தன் கிராம மக்களுக்கு செய்து வரும் கிதுறு மாஸ்டர் அட்டாளைச்சேனை தவிசாளராக நியமிக்கப் படும் பட்சத்தில் ஊழலற்ற சிறப்பான மக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குவார். எனவே அவருக்கே அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் பதவியினை முன்னுள்ள இரண்டு வருடங்களுக்கு வழங்கி உப தவிசாளர் பதவியினை ஒலுவிலுக்கும் மீதமுள்ள இரண்டு வருடங்களை பாலமுனை மற்றும் ஒலுவிலுக்கும் வழங்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச கல்வியலாளர்கள் கட்சித் தலைமையைக் கேட்டுள்ளனர்.

அரசியலும் ஆட்சியும் இன்று யாருக்கு யாரால் செய்யப்பட வேண்டும் என்ற நிலமை மாறி கம்பெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காறன் என்ற மோசமான நிலமை இன்றைய அரசியலில் உருவாகியுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேசம் என்பது பல கல்வியலாளர்கள் நீதிபதிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள் என பலர் வாழும் பிரதேசம். இதனையாட்சி செய்ய ஒரு கல்வியலாளரே தேவை இதனைக் கருத்தில் கொண்டு தலைமை தீர்மானம் எடுக்குமா? என்பதுவே இன்றைய கேள்வியாக இருக்கிறது.

எது எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக இரண்டு அதிபர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிக் கொடுத்துள்ளார்கள். அவர்களை சுழற்சி முறையில் தவிசாளார் பதவியினைக் கொடுத்து பிரதேசத்தையும் கல்வித்துறையையும் அலங்கரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -