இது சம்பந்தமான வழக்கு நேற்று நீதிமன்றத்துக்கு வந்த சில இளம் முஸ்லிம் சட்டத்தரணிகள் சென்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கெதிராக வாதித்தும் குற்றவாளிகள் பொலிசாரின் வாதத்தால் பிணையில் விடப்பட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் இதன் போது கலந்து கொண்ட இளம் சட்டத்தரணிகள் பாராட்டுக்குரியவர்கள். ஆனாலும் பல கேள்விகள் இங்கு எழுகின்றன.
அம்பாரை சம்பவம் என்பது தனிநபர் பிரச்சினை அல்ல. முஸ்லிம் சமூகத்துக்கெதிரான வன்செயல். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கெதிராக வாதாட தரமான சட்டத்தரணிகள் ஏன் முன்வரவில்லை.?
கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளது. இது போல் முஸ்லிம் காங்கிரசில் ஊர்ப்பட்ட சட்டத்தரணி கும்பல் இருக்கின்றனர். சில ஜனாதிபதி சட்டத்தரணிகளாம்.
இவர்களில் எவரும் முன்வராமைக்கான காரணம் என்ன?
அம்பாரை மாவட்டத்தில் சுமார் மூன்று லட்சத்துக்கும் மேல் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்கள் மத்தியில் பொலிசாரின் போலித்தனமான வாதத்தை முறியடிக்கும் சட்டத்தரணிகள் இல்லையா? இருந்தால் ஏன் முன்வரவில்லை?
சில சட்டத்தரணிகள் மக்கள் பிரதிநிதியாகவும் உள்ளனர். ஏன் இவர்கள் அக்கறை கொள்கவில்லை? குறிப்பாக அம்பாரை முஸ்லிம்களை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர், செயலாளர், பிரதித்தலைவர் என்போரெல்லாம் சட்டத்தரணிகளாம். ஏன் இவர்கள் முன் வரவில்லை.? முன்வராத இவர்களுக்கு முஸ்லிம் சமூகம் என்ன தீர்ப்பை வழங்கப்போகிறது?
முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி