சர்வதேச கல்வியகமும் நோர்வே ஆசிரியர் சங்கமும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் இணைந்து நடாத்தும் திருகோணமலை கல்வி வலய அதிபர்கள் ஆசிரியர்களுக்கான செயலமர்வு இன்று 07.03.2018ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் காலை.8.30 மணிமுதல் மாலை.3.00மணிவரை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.டி.எம்.டபிள்யு.ஜி.திஸாநாயக்கவும் சிறப்பு அதிதியாக திருமலை வலயக் கல்விப் பணிப்பாளர் என். விஜேந்திரனும் கலந்துகொண்டு செயலமர்வை ஆரம்பித்துவைப்பார்கள்.
ஆசிரியர்ளின் உரிமைகளும் கடமைகளும் சவால்களும் ஆசிரியர்கோவையினுள் அடங்கியிருக்கவேண்டியவை மற்றும் பெண்ஆசிரியைகள் எதிர்நோக்கும் சவால்களும் கல்விக்கான பங்களிப்பும் போன்ற தலைப்புகளில் செயலமர்வு நடைபெறும்.
வளவாளர்களாக முன்னைநாள் வலயக் கல்விப் பணிப்பாளரும் சர்வதேச கல்வியகத்தின் சிரேஸ்ட வளவாளருமான திருமதி.சுபா.சக்கரவர்த்தி சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அழைக்கப்பட்ட அதிபர்களும் ஆசிரியர்களும் இதில் கலந்துகொள்வார்கள். திருகோணமலை கோட்டக்கல்விப்பணிப்பாளர் கோ.செல்வநாயகம் நன்றியுரையாற்றுவார்.