அத்துடன் அலுத்கம நிகழ்வு உட்பட அப்போதைய மஹிந்த ஆட்சியின் போது எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான வண்செயல்கள் நடைபெற்றனவோ அவைகளுக்கு மஹிந்த அரசும் அவ்வாறே நல்லாட்சியில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்டதான திகன தெல்தெனிய உட்பட அனைத்துத் தாக்குதல்களுக்கும் நல்லாட்சி என்று கூறப்படுகின்ற இந்த அரசின் ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரனில் ஆகியோர் பொறுப்புச் சொல்லி ஆகவேண்டும்.
மறைமுகமாக ஒருவரையொருவர் குறை சொல்லிக் குற்றச்சாட்டிக் கொண்டிருக்காது அனைத்திற்கும் சுவாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு பக்கசார்பற்ற முறையில் விசாரனைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை இணங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன்-ஜே.பி
பணிப்பாளர்
இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
தொ. பே. 0715654580, 0724589459