ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தினை பிறப்பிடமாக கொண்ட அல்-ஹாபிழ் எம்.ஐ.மொஹம்மட் இஸ்ஸத் அன்மையில் எகிப்து நாட்டில் இடம் பெற்ற சர்வதேச குர் ஆன் போட்டியில் ஐந்தம் இடத்தினை பெற்று ஊருக்கும், நாட்டுக்கும் பெரும் சேர்த்துள்ளார்.
ஐம்பந்தைந்து நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு கொண்ட குறித்த சர்வதேச குர் ஆன் போட்டியில் இஸ்ஸத் ஐந்தாம் இடத்தினை பெற்றிருப்பதானது அவருக்கு குர் ஆன் மற்றும் மார்க்க கல்வியினை வழங்கிய வாழைச்செனை அந் நஹ்ஜத்துல் இஸ்லாமிய அரபு கல்லூரிக்கும் மேலும் பெருமை சேர்க்க கூடிய விடயமாக உள்ளது.
அத்தோடு தது பாடசாலை மற்றும் அரபு கல்லூரி வாழ்க்கையில் சகல விதமான இஸ்லாமிய மார்க்க, அரபு மொழியிலான போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ள அல்- ஹாலிழ் மெளலவி இஸ்ஸத் வாழைச்சேனை அந்- நஹ்ஜத்துல் இஸ்லாமிய அரபு கல்லூரியில் 2015ம் ஆண்டு அல்-ஆலிம் மெளலவி பட்டத்தோடு வெளியேறியதுடன் 2018ம் ஆண்டு நாவலபிட்டிய ஹம்சிமியா அரபு கலாசாலையில் அல்-ஹாபிழ் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.