70 வயதில் வந்து தமிழ் தேசியத்தை எங்களுக்கு கற்று கொடுக்க முனைகிறார்கள்


பாறுக் ஷிஹான்-
மிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களை புனிதர்கள் ஆக்கிவிட்டது.காலம் இன்று எம்மை விடுதலை செய்து விட்டது. ஒட்டுக் குழு என்றும் கொலைகாரர்கள் என்றும் எம்மைத் தூற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களிடம் ஆதரவு கோரி - ஆதரவு பெற்று எங்களை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்து விட்டது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்களான ஜெகன் மற்றும் முடியப்பு றெமிடியஸ் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்

யாழ் ஊடக அமையத்தில் இன்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அத்துடன் அங்கு கருத்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரான முடியப்பு றெமிடியஸ் தமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளை சிங்கள பௌத்த கலாச்சாரத்திற்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு 70 வயதில் வந்து தமிழ் தேசியத்தை எங்களுக்கு கற்று கொடுக்க முனைகிறார்கள்.(மறைமுகமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனை சாடுகின்றார்)
நாங்கள் 13 வயதில் இருந்தே தமிழ் தேசியத்திற்காக செயற்படுகின்றோம். என்றும் தெரிவித்தார் .

இதேவேளை கூட்டமைப்பின் இணக்க அரசியல் முடிவுக்கு தமிழர் தரப்பில் பலத்த எதிர்ப்பலை கிளம்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -