கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அரபா நகரில் சேதமடைந்து காணப்படுகின்ற ஜும்ஆப் பள்ளி வீதியினை மிக துரிதகதியில் புனர்நிர்மாணம் செய்வற்கும், அம்மக்களின் மிகநீண்ட காலத் கோரிக்கையான மாணவர்களுக்கான பாலர் பாடசாலை ஒன்றினை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதே சபையின் உறுப்பினர் ஏ.ஜீ. அசீஸுல் ரஹீம் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் குறித்த இடங்களை பார்வையிட்ட பிரதேச சபை செயலாளர் தற்போதைக்கு பாலர் பாடசாலையினை தற்காலிகமாக ஆரம்பிப்பதற்காண நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அத்துடன் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஜீ. அசீஸுல் ரஹீம் வேண்டிக்கொண்டதற்கு அமைவாக குறித்த பகுதியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நாளாந்த பத்திரிகைகளை வாசிப்பதற்கான வாசிகசாலை அமைத்து தரும்படி வேண்டிக் கொண்டதற்கு இணங்க செயலாளரினால் அதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன் வாசிகசாலைக்கான தளபாடங்களை தருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை பாலைநகர் பாலர் பாடசாலையினை பார்வையிட்டதோடு அதன் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தருவதாகவும் செயலாளர் எச்.எம்.எம் ஹமீம் குறிப்பிட்டார்.