இலங்கைக்கு முதன் முறையாக விஜயம் செய்துள்ள
ஜோதிட சிகாமணி பாம்பாட்டிசித்தர் கே.பி இளங்கோவனை கௌரவிக்கும் முகமாக கடந்த திங்கட்கிழமை(05) மாலை கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் எடுக்கப்பட்ட படங்கள். பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இளங்கோவனுக்கும், இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் விழா ஏற்பாட்டாளரும் ஜோதிடருமான மதுரை பத்மராஜனுக்கும் பொன்னாடை போர்த்துவதையும், திருமதி கௌசலாதேவி கோவிந்தப்பிள்ளை அருகிலிருப்பதையும் இசைத்தென்றல் தயாரிப்பாளர் அபூபைதா மௌஜூட் பாராட்டப்படுவதையும் செல்வி அகல்யா, சித்தார்தராஜா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதையும் பார்வையாளர்களில் ஒரு பகுதியினரையும் படங்;களில் காணலாம்.