பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில்.


எம்.ஐ.சர்ஜூன்-
1. வாக்குறுதியளித்த மாதாந்த இடர் கொடுப்பனவை (MC Allowance) 20% ஆல் அதிகரித்தல்
2. ஏற்கனவே நடைமுறையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட மொழித் தேர்ச்சிக் கொடுப்பனவை மீண்டும் வழங்குதல்
3. சொத்து கடன் எல்லையை நீக்குதல்
4. வைத்திய காப்புறுதி முறையை செயற்படுத்தல்
5. முறையான ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
6. பதவி உயர்வு சம்பந்தமான கட்டுப்பாட்டை நீக்குதல்
7. சம்பள முரண்பாட்டை இல்லாமல் செய்தல்
8. ஆட்சேர்ப்பு முறைமையில் திருத்தங்களைக் கொண்டு வருதல்.
9. பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ஊழியர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புதல்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2018.02.28ம் திகதி முதல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
14 நாட்களாக தொடரும் இப்போராட்டத்தை ஊடகங்கள் வாயிலாக மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று 2018.03.13ம் திகதி - செவ்வாய்க்கிழமை வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வளாக முன்றலில் நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் இராஜசேகரம், "பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது சம்பந்தமாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் உடன்பாடு காணப்பட்ட விடயங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு கோரி இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களைக் கொண்ட 24 தொழிற் சங்கங்களை உள்ளடக்கிய
'பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த சம்மேளனத்தின்' ஏற்பாட்டில் நாடாளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்துப் பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்களும் இணைந்து இந்த தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத பட்சத்தில் பல்கலைக்கழக மாணவர் சமூகமும் எமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பததாக கூறப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் மாணவர் சம்மேளனம் தமது முடிவை அறிவித்து ஊழியர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பதற்கான சாதகங்கள் தென்படுகின்றன" என மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அனைத்துப் பீடங்கள், கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகம் என்பவற்றில் பணியாற்றும் பெருமளவிலான கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 2018.03.06 பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு முன்பாக நடைபெற்றதுடன், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் போதனைசாரா ஊழியர்கள் 2018.02.05 நள்ளிரவு 12 மணி தொடக்கம் 2018.02.07 நள்ளிரவு 12 மணிவரை 48 மணிநேர பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன், இதே கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2018.01.17ம் திகதி கல்விசாரா பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தையும், 2018.01.25ம் திகதி ஒருநாள் அடையாள பணி பகிஷ்கரிப்பையும் நடாத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -