வன்முறைகள் மற்றும் கலவரங்களுக்குப் பின்னால் திட்டமிடப்பட்ட குழுக்கள்


திகன உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் கலவரங்களுக்குப் பின்னால் திட்டமிடப்பட்ட குழுக்களின் செயங்பாடுகள் அடிப்படைய அமைந்திருப்பது தெரியவந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த நாசகார செயற்பாடுகளுக்கு மக்களை தூண்டுகின்ற முயற்சிகளும் குறித்த சில அரசியல் குழுக்கள் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி நேற்று அமைச்சர்களுடன் சந்திப்பை நடத்தினார். முப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து சட்டத்தை நிலைநாட்டுவதற்கும், அதற்குத் தேவையான அதிகாரங்களை அரசியலமைப்பின் ஊடாக பயன்படுத்தி ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு செயற்படுவதாக ஜனாதிபதியும், பிரதமரும் எம்மிடம் தெரிவித்தனர்.

கண்டி திகன,தெல்தெனிய மற்றும் அம்பாறை பகுதிகளில் அண்மைய நாட்களாக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து
நாட்டில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருப்பதோடு 6 வருடங்களுக்குப் பின்னர் நாடு முழுவதிலும் அவசர காலச் சட்டமும்இ கண்டி மாவட்டத்தில் மூன்றாவது நாளாகவும் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

'இந்த சம்பவங்களின் பின்னால் ஒரு குழு செயற்படுகிறது. அந்தக் குழு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுவது தெளிவாக காணமுடிகிறது. சாதாரண மக்களின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற சம்பவங்கள் அல்ல என்பதையும்இ வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட குழுக்களே இதனை செய்திருப்பதாகவும் காணமுடிகிறது.

அனைத்து இனத்தவர்களினதும் பாதுகாப்பானது அரசாங்கத்தினால் உறுதிப்படுத்துவதற்கான சரியான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருக்கிறது என்பதை குறிப்பிட விரும்புகிறேன் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -