மனித நேய சட்டம் கடுமையான முறையில் மீறலுக்குள்ளான கீழ்க்கண்ட சந்தர்ப்பங்கள் தொடர்பில் அமைச்சரவையினால் அடிக்கடி அங்கீகரிக்கப்பட்ட கொள்கைத்தீர்மானத்திற்கு அமைய பாதிக்கப்பட்ட முழுமையான இழப்பீட்டினை வழங்குவதற்காக சுயாதீன நிறுவனம் ஒன்றை முன்னெடுப்பதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.
1) கடந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல் அல்லது அதன் பெறுபேறாக அதனால் அனர்த்தம் ஏற்பட்ட சம்பவங்கள்
2) அரசியல் மோதல் அல்லது பொதுமக்கள் குழப்பநிலை
3) இலங்கையில் நபர்களின் ,குழுக்களின் அல்லது இன மக்களின் உரிமைகளை திட்டமிட்டவகையில் மீறுதல்.
4) பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் அனைத்து நபர்களினதும் பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச இணக்கப்பாடு அழுத்தப்படுத்தப்பட்டுள்ள வகையில் காணாமல் ஆக்குதல்.
இதற்கமைவாக இவ்வாறான சம்பவங்களினால் பாதிப்பிற்கு உள்ளான மோதல்களுக்குள் சிக்கிய கிராம மக்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படை உறுப்பினர்களின் குடும்பங்கள் அனைத்து இன மற்றும் மதக்குழுக்களுக்கு சொந்தமான இலங்கையர்களுக்கு பாதிப்பிற்கான முழுமையான நஷ்டஈட்டை சமர்ப்பிக்க முடியும்.
பாதிப்பு முழுமையான நஷ்டஈடு அலுவலகத்தை சட்டத்தின் மூலம் அமைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதற்கு தேவையான திருத்த சட்டமூலத்தை தயாரிப்பதற்காக ஆலோசனைகளை வழங்குவதற்கென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.