'கண்டி'ப்பாய் 'கண்டி'ப்போம்
++++++++++++++++++++++++
Mohamed Nizous
அநியாயம் என்பது
அந்நியர்க்கு நடந்தாலும்
'கண்டி'ப்பாய் 'கண்டி'ப்போம்
காடையரைத் தண்டிப்போம்.
தவறுதலாய் நடந்ததற்கு
தறுதலையாய் பதில் கொடுத்தால்
எவரதைச் செய்தாலும்
இஸ்லாமியன் ஆனாலும்
அவனை எதிர்க்க வேண்டும்
அக்கிரமம் தடுக்க வேண்டும்.
காக்கிச் சட்டைகள்
போக்கிரியைத் தண்டித்தால்
தாக்குதல் நடப்பதனை
தவிர்க்கப் பாடுபட்டால்
காக்கும் கடமைக்காய்
கட்டாயம் மதிப்போம்
பிரச்சினை தவிர்க்க
அரசு செயற்பட்டால்
அரசியலை மறந்து
அவர்களை ஆதரிப்போம்
ஒரு சில சம்பவத்தை
ஊதிப் பெருப்பிக்கோம்.
இனக் கண்ணாடியிட்டு
யாவற்றையும் நோக்கல்.
தனக்கொரு நியாயம்
உனக்கொரு நியாயம்
என்று வாழ்வதை
இறைவனும் ஏற்க மாட்டான்
அம்பாரையில் நடந்த
அராஜகத்தை எதிர்ப்பது போல்
தெல்தெனிய கொலையையும்
தீவிரமாய் எதிர்ப்போம்.
நல்லவற்றை ஆதரிப்போம்
பொல்லாததை எதிர்ப்போம்.
அள்ளாஹ் போதுமாவான்
அனைவரையும் பாதுக்காக்க.