எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எனும் தொனிப்பொருளில் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த கலாச்சார விழா 15 ஆம் திகதி கல்முனை நகரில் அமையப்பெற்ற உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஒன்று கூடல் மண்டபத்தில் கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது திகாமடுல்ல மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பேராசிரியர் எஸ்.மௌனகுரு அம்பாறை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் மதகுருமார்கள் பாராட்டுப்பெற வருகை தந்திருந்த கலைஞர்கள் கல்விமான்கள் புத்திஜீகள் அடங்களாக பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.