அஸீம் கிலாப்தீன்-
அனுராதபுர மாவட்டத்தில் உள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு.
அனுராதபுரம் ரம்பேவ பிரதேச சபைக்கு உட்பட்ட 10 விளயாட்டு கழகங்களுக்கு கரப்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானினால் வழங்கி வைக்கப்பட்டது.
இளைஞர்களது விளையாட்டு திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன, மத, கட்சி பேதமின்றி ரம்பேவ பிரதேசத்தில் வசிக்கின்ற பௌத்த, முஸ்லிம் இளைஞர்களுக்கே இவ்விளையாட்டு உபகரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.