சிங்களச் சகோதரனுக்கு தோஹாவில் இருந்து முனாசின் கடிதம்.

#என் அன்புச் சிங்களச் சகோதரனே..!

மதத் தலைவர்கள் என்போர் நல்லவற்றைப் போதித்து சமாதானத்தை ஏற்படுத்துவோரே தவிர அநியாயத்துக்கு உடன் படுவோரல்ல..

#என் அன்புச் சிங்களச் சகோதரனே..!

உன் மார்க்கத்தில் எத்தனையோ சீதேவிகள் மதகுருக்களாக இருக்கும் நிலையில் நீங்கள் காலில் விழுந்து வணங்கும் சில மதகுருக்கள் என்னும் இனவெறியர்கள் இன்று கேடுகெட்ட கொலைகார கொடூரக் குருவாக வலம் வருகிறார்களே..!

சமாதானத்தைக் குழி தோண்டி புதைக்கிறார்களே..
நீ புத்தியுள்ள பகுத்தறிவாளன் என்றால் இதனைத் தட்டிக்கேட்க மாட்டாயா..?

மார்க்கஷ்தலங்களை எரிக்கும் இந்த கோரத்தாண்டவமாடும் குழுக்களின் தலைவர்களாக உன் மதகுருக்களே முன் நிற்கின்றனரே நீ பார்க்க வில்லையா...?

இதனைத்தான் உன் பெளத்த மதம் போதிக்கிறதா..?
இல்லை அறைகுறையானவர்களை மதகுருக்களாக வைத்ததன்
விளைவுதான் இக்கோரத் தாண்டவமா..?

இப்படியான கேவலக் கொடூரங்களைச் சமாதானமாக பேச வேண்டியவர்கள் அல்லவா மத குருக்கள் என்போர்..


#என் அன்புச் சிங்கள சகோதரனே..!

நாம் எப்படி பழகுகிறோம், நாம் எப்படி சகோதரத்துவத்துடன் பேசுகிறோம், நாம் ஒன்றாக உணவுண்ணுகிறோம். அது அப்படியிருக்க நீ ஏன் சும்மா பார்த்துக்கொண்டிருக்கிறாய்.

பிறப்பில் பிழையிருக்கலாம் அதற்காக நாட்டையும் அங்கு வசிக்கும் மக்களையும் அப்பிழைக்குள் இழுத்துச் செல்லல் நியாயமா..?

#சிங்கள சகோதரனே..!

நீ ஒன்றைப் புரிந்து கொள்..
வாழ நினைப்பவன் அதிகமாக சிந்திக்க வேண்டும்..
என்னினம் வாழப்பிறந்தவனல்ல..
வாழும்வரை நல்லதைச் செய்துவிட்டு மரணிக்கப் பிறந்தவன் என்று உண்மையாக ஈமான் கொண்டவன்.

எனவே என் சமூகம் ஜிஹாத் செய்ய வெளிக்கிட்டால் வீதியில் அநியாயக் காறர்கள் யாரும் நிக்க முடியாது.
வாழநினைப்பவன் அதிகம் யோசிப்பான்.
ஆனால் மரணிக்கத் துணிந்தவன் ஒரு நொடியில் அவனின் கடமைய முடிப்பான்.

#என் அன்புச் சிங்களச் சகோதரா....!

இனியும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை..
மனது துடிக்கிறது.
நெஞ்சம் அழுகிறது.
மேனி நடுங்குகிறது.
என் சமூகம் தாக்கப்படுகிறது.
என் மதத்ஷ்தலங்கள் தீ மூட்டப் படுகிறது.
என் உறவுகளின் சொத்துக்கள் நாசமாக்கப் படுகிறது.
நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க முடியல..!
நீ வீதிக்கு வருகிறாயா..?

#என் அன்புச் சிங்களச் சகோதரனே..!

உன் மதகுருக்களை அடக்கி பன்சலைக்குள் வைத்து பூட்டி வைக்கிறாயா..!
முடியவில்லை என்றால் பெரிய சங்கிலி தருகிறேன். கட்டிவைக்கிறாயா..
இது நாம் வாழும் பொதுவான பூமி.
இது பெளத்தருக்கோ,
இந்துவுக்கோ
முஸ்லீமுக்கோ
கிறிஷ்தவருக்கோ
சொந்தமான பூமியல்ல..
இதனை யாரும் உரிமை கோர முடியாது..!

#என் அன்புச் சிங்களச் சகோதரனே..!

இன்னும் ஒன்றைக் கூறுகிறேன் நன்றாகக் கேள்..!

இத்தனை அநியாயங்களுக்கும் பின்னால் தலைமை தாங்குவது உன் மதகுரு என்பதை நீ அறியாமலில்லை.
அவர்களின் மிக மோசமான வீடியோக்களையும் நீ பார்க்காமலுமில்லை.

ஆனால் இத்தனை அசம்பாதிவதம் நடந்தும், என் மதகுருக்களில் ஒருவர் கூட வீதிக்கு வந்து என் சமூகத்தை தூண்டவில்லை. அவர்களின் உபதேசம் எல்லாம்
அமைதியாக இருங்கள்.
பொறுமையாக இருங்கள்.
இறைவனிடம் முறையிடுங்கள்.
சமாதானம் பேணுங்கள் என்பதே..!

#என் அன்புச் சிங்களச் சகோதரா..!

மட்டக்களப்பில் இருந்து உன் மதகுரு வெறிப்படைகளுடனும் ஆயுதங்களுடனும் வந்திறங்கி அட்டகாசம் செய்வதை இலங்கைப் பாதுகாப்புப் படை பார்த்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறதே..
இதனை எங்களால் சகிக்க முடியாமல் இருக்கிறோமே..

#என் அன்புச் சகோதரா..!

என்ன நடக்கிறது இந்த நாட்டுல
ஏன் நாங்கள் கலிமாச் சொன்னதுதான் உங்களுக்குப் பிடிக்க வில்லை யென்றால் கூறுங்கள்..

நாங்கள் மொழிந்த கலிமாவைப் பாதுகாக்க யுத்தம் செய்யவும் தயாராகி வருகிறோம்.
என்பதனை என் இறுதி வார்த்தையாகக் கூறுகிறேன்.
எனவே நீயேனும் நிதானமாக சிந்தித்து உன்னினக் கொடூரர்களுக்கு நல்ல புத்தி சொல்லு.
நன்றி மீண்டும் வருகிறேன்.

சமூகத்தின் குரலாக..!
தோஹாவில் இருந்து
அட்டாளைச்சேனை
எஸ்.எல்.முனாஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -