கண்டி வன்முறையின் போது பலியான அப்பாவி இளைஞன்- படங்கள்

ண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து தற்போது நிலைமை வழமைக்குத் திரும்புவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, வன்முறைச் சம்பவத்தையடுத்து அங்கு ஏற்பட்ட தீயில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சனநடமாட்டம் குறிப்பிட்டளவில் இருப்பதாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.



நேற்று நண்பகலில் இருந்து மெதுவாக ஆரம்பித்த வன்முறைச் சம்பவங்கள் மாலையாகும் போது பலத்த வன்முறையாக மாறியதாகவும் பின்னர் அங்கு பெய்த கடும் மழையையடுத்த ஓரளவு தணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றிரவு சிறு சிறு கல்வீச்சுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் 100 க்கும் மேற்பட்ட கடைகளும் உடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியை அமைச்சர்கள் நேரில் வந்து பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -