நாட்டின் தற்போதைய அமைதியற்ற நிலையை கருத்திற்கொண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழா பிற்போடப்பட்டுள்ளது.


Aruna Rathnayake-
டந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையையும் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையையும் கருத்திற்கொண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழா பிற்போடப்பட்டுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் தின விழா எதிர்வரும் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் முறையே நுவரெலியா மற்றும் அட்டன் பிரதேசங்களில் நடைபெறவிருந்தது, எனினும் நாட்டின் தற்போதைய அமைதியற்ற நிலையை கருத்திற்கொண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமாகிய பழனி திகாம்பரம்; அவர்களின் பணிப்புரைக்கு அமைய தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழா பிற்போடப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணி தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமாகிய சரஸ்வதி சிவகுரு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விடுத்துள்ள அ றிக்கையில் இவ்வுலகிலே சீரும் சிறப்பும் வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால் அனைவருமே நம்மை பெற்றெடுத்த தாய்மார்களை தான் கூறுவோம். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்ப கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்கு பின்னால் பெண்களின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்திலேயே பல்வேறு விதமாக பணிகளில் ஈடுபட்டு ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிற்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஆனால் நடைமுறையில் அவை வேறுபட்ட முறையில் இருக்கிறது. பெண்கள் பல்வேறு வன்முறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் இலக்காகி தனது சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை பெண்களுக்கான சமூக அந்தஸ்தினை ஓரளவேனும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவம் அரசியல் அதிகாரத்தினை வளர்த்தெடுப்பதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது. குறிப்பாக மலையகத்திலிருந்து இன்று ஒவ்வொரு சபைகளிலும் பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படும் வகையில் கனிசமான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளுராட்சி மன்றங்களோடு மாத்திரம் நின்றுவிடாது நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றம் வரையும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அத்தகைய சூழலை தோற்றுவிக்க மகளிர் தினத்தில் திடசங்கற்பம் கொள்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -