திருகோணமலை,ரொட்டவெவ கிராமத்தில் மத்ரஸதுல் ஹூதா அரபிக்கல்லூரி என்ற பெயரில் இலவச பகுதி நேர
ஹிப்ல் குர்ஆன் மனனப்பிரிவு மத்ரஷா இன்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசாலைக்கல்வியை முடித்ததன் பின்னால் மாணவர்கள் மத்தியில் மார்க்க கல்வியை விரிவு படுத்தும் நோக்கில் இம்மத்ரஷா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரொட்டவெவ கிராமத்தில் அதிகளவில் விவசாயத்தொழிலில் ஈடுபடுகின்ற மக்கள் தனது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையினை மிக ஆர்வத்துடன் கற்பிக்கும் நோக்கில் ஈடுபட்டு வருவதுடன் கல்வியே எதிர்காலம் என்ற சிந்தனையுடன் மாணவர்களுக்கு கல்வியை புகட்டுவதில் அக்கறையுடன் செயற்பட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இம்மத்ரஷாவினை ஆரம்பிக்கும் நிகழ்வில் ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளி பேஷ் இமாம் எம்.நஸார்தீன் மௌலவி மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் குலதுங்க மற்றும் மத்ரஷாவின் அதிபர் சமீம்
ஆசிரியர்களான மௌலவி அப்துல்சத்தார். எம்.ஜனுதீன் மற்றும் கிராம புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.