|
பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சாந்தனின் நூல்களைப் பற்றியபின் வரும் உரைகள் இடம்பெற்றன..
சாந்தனின் “கனவெல்லாம்” மொழிபெயர்ப்புக் கவிதைகள் நூலைப பற்றி மேமன்கவியும்,“;சிட்டுக்குருவி” சிறுகதைகள் நூலைப் பற்றி மு.தயாபரனும், பயண நூலான “ஒளி சிறந்த நாட்டிலே” நூலைப் பற்றி ஞா.பாலச்சந்திரனும் ,“சாந்தனின் எழுத்துலகம்” நூலைப் பற்றி கலாநிதி ந. இரவீந்திரனும், “என் முதல் வாத்து” மொழிபெயர்ப்புக் கதைகள் நூலைப் பற்றி சட்டத்தரணி இரா.சடகோபனும் உரையாற்றினார்கள்..
அதனைத ;தொடர்ந்து, ‘சிட்டுக்குருவி” -நூலைப் பற்றி திரு. செ. சக்திதரன், ‘கனவெல்லாம்” மொழிபெயர்ப்புக் கவிதைகள் நூலைப் பற்றி கவிஞர் சடாகோபன், ‘சாந்தனின் எழுத்துலகம்’ நூலைப் பற்ற திருமதி. வசந்தி தயாபரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.
எழுத்தாளர் சாந்தன் ஏற்புரையை வழங்கினார்.
கலை இலக்கிய நண்பர்களும், தமிழ்க் கதைஞர் வட்டமும் (தகவம்) இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் கலை இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.