முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கண்டித்து கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தால்; நீதிமன்ற நடவடிக்கைகள்; பகிஷ்கரிப்பு.


பி.எம்.எம்.ஏ.காதர்-
நாட்டின் பல பாகங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கண்டித்து கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின்; சட்டத்தரணிகள் (09-03-2018) நீதிமன்ற நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்தாக சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி ஐ.எல்.எம்.றமீஸ் தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்களில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டு தீட்டுக் கொளுத்தப்படடுள்ளதுடன்; வர்த்தக நிலையங்களும்,குடியிருப்புக்களும் உடைத்து தீயிடப்பட்டுள்ளது இன்றைய நல்லாட்சி அரசில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கோள்ளப்பட்ட பாரிய தாக்குதல்களில் இது மிகமுக்கியமானதாகும்.

இலங்கை முஸ்லிம்கள் ஆட்சியாளர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து செயற்பட்டுவருகின்றனர் இந்த நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் எப்போதும் இன ஐக்கியத்திற்கு ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கின்ற செயற்பாடகவே அமைந்துள்ளது.இவ்வாரான செயற்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

எனவே இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடைபெறக் கூடாது என்பதை வலியுறுத்தியே நாங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்து எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம்.எனவே அரசாங்கம் முஸ்லிம்களின் பாதுகாப்பையும், இருப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி ஐ.எல்.எம்.றமீஸ் மேலும் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -