வேலியே பயிரை மேய்ந்துள்ளது - எஸ்.ரி.எப் பாதுகாப்பு முஸ்லிம்களுக்குத் தேவையில்லை.


ஏ.எஸ்.எம்.ஜாவித்-

கண்டி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இனவாத தாக்குதல் சம்பவங்கள் முழு முஸ்லிம் சமுகத்தினையும் கவலை கொள்ளவும், மனமுருகவும் வைத்துள்ளது. ஒரு சிறு சம்பவத்தின் எதிரொலி கண்டி நகரத்தில் உள்ள முஸ்லிம்களின் பெரும்பாலான உடமைகள் முற்றாகவும், பகுதியளவிலும் தீயினால் நாசமாக்கப்பட்டமை தற்போது துரதிஸ்டவசமான ஒரு சம்பவமாகும்.

முஸ்லிம்கள் எங்கெங்கு இருக்கின்றார்களோ ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் வன்முறையாளர்கள் தேடிச் சென்று தமது காடைத்தனங்களையும், சண்டித்தனங்களையும் காட்டியுள்ளனர். இரண்டு நபர்களுக்குள் ஏற்பட்ட மேற்படிச் சம்பவம் இன்று காட்டுதீ போன்றாகி வருகின்றது. என்றாலும் தீடீரென ஒன்று கூடிய பல சிங்கள இனவாதிகள் முஸ்லிம் சமுகத்தின் வர்த்தக தளங்கள், ஏனைய கடைகள், வீடுகள் மற்றும் பள்ளிவாசல்களை தேடித் தேடிச் சென்று தாக்கியும், சு10றையாடியும், தீ வைத்துக் கொழுத்தியும் உள்ளதுடன் சில இடங்களில் முஸ்லிம்களுக்கு அடித்து துன்புறுத்தியுள்ளனர். அத்துடன் பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட முஸ்லிம் சமுகத்தினது இடங்களுக்கு கற்களால்கூட எறிந்து தமது அடாவடித்தனங்களை காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த சம்பவங்கள் விடயத்தில் பாதுகாப்புத் தரப்பினரது செயற்பாடு என்பது மந்தகதியில் இருந்துள்ளதையும் அவர்களின் செயற்பாடுகள் விரைவாக இருந்திருந்தால் இடம் பெற்ற சகல தாக்குதல்கள் குறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இதில் முக்கிய விடயம் பாதுகாப்பு என்ற போர்வையில் பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்புத் தரப்பினர் பல இடங்களில் காடையர்களின் தாக்குதல்களை தடுக்காது சும்மா பாhத்துக் கொண்டிருந்தனர் என சம்பவங்களை நேரில் கண்ட முஸ்லிம்கள் பகிரங்கமாகவே ஆதாரங்களுடன் சமுக வளைத்தளங்களினூடாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக விஷேட அதிரடிப் படையினர் (STF) பல இடங்களில் தாக்குதல்தாரிகளுக்கு ஆதரவு வழங்கி தாக்குதல்களை நடாத்த உடந்தையாக இருந்துள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமும் கண்டிக்கத்தக்க விடயமுமாகும். ஒரு இடத்தில் பிரச்சினைகளோ அல்லது தாக்குதல்களோ இடம் பெறுமானால் அதனை தடுத்து அதற்கான தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே அவர்களின் பொறுப்பும், கடமையுமாகும். இந்த விதிமுறைகளை அவர்கள் விஷேட அதிரடிப்படையினர் மீறியுள்ளதுடன் ஒரு தரப்பினருக்கு அவர்களின் சட்டத்திற்கு முரணான காடைத்தனங்களுக்கு உடந்தையாக உள்ளனர் என கண்டி முஸ்லிம்கள் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

கடந்தகாலங்களிலும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் ஏற்பட்ட வேளைகளில் ஒருசில பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வன்முறையாளர்களின் காடைத்தனங்களுக்கு உடந்தையக இருந்துள்ளனர். இவ்வாறானதொரு மற்றொரு சம்பவமே நேற்று கண்டி தெல்தெனிய, திகன உள்ளிட்ட இடங்களில் இடம் பெற்ற சம்பவங்களாகும். பல இழப்புக்களுக்கு வழி சமைத்தது பாதுகாப்புத் தரப்பினரின் கையாலாகத் தன்மைகள் என்றே கூறலாம்.

இவ்வாறான நிலையில் இந்த நாட்டு முஸ்லிம்கள் விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு விடயத்தில் நம்பிக்கை இழந்துள்ளனர். தமக்கு அவர்களின் பாதுகாப்பு தேவையில்லை. இவ்வாறனதொரு படை இலங்கையில் தேவையில்லை என பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தாக்குதல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் உள்ளாகும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்புத் வழங்க வேண்டியவர்கள் பக்கச்சார்பாக நடக்கும்போது யாரிடம் பாதுகாப்பு கோருவது என்ற திரிசங்கு நிலையில் இன்று இலங்கைவாழ் முஸ்லிம்கள் இருக்கின்றனர். நேற்று இடம் பெற்ற சம்பவங்களுக்குள் சிக்கிய முஸ்லிம்களை அவர்கள் பாதுகாக்கத் தவறி விட்டனர் என்பது மட்டும் அந்த மக்களால் நேரடியாக அவதானிக்கப்பட்ட விடயமாகும்.

இதேவேளை இலங்கை வந்துள்ள ஐக்கியநாடுகள் சபையின் கண்ணிவெடி சம்பந்தமான விஷேட தூதுவர் அல்-ஹுஸைனை கண்டி மற்றும் அம்பாறை பகுதிகளுக்கு அழைத்துச் சென்று இன்று இலங்கை முஸ்லிம்கள் மீது இனவாதிகள் மேற்கொண்டு வரும் காடைத்தனங்களையும் அவர்கள் மேற்கொண்ட வன்முறை வடுக்களையும் காட்டி சர்வதே மக்களுக்கு தெரியப்படுத்த வழி சமைக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான நலன் விரும்பிகள் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள், முஸ்லிம் கட்சிகள், புத்தி ஜீவிகள் என்போரிடம் விநயமாகக் கேட்டுக் கொள்கின்றனர்.

எனவே கண்டிச் சம்பவத்தில் வன்முறையாளர்களுக்கு உடந்தையாக இருந்துள்ள சகல பாதுகாப்புத் தரப்பினர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கமும், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறானவர்களை அப்பரதேசங்களில் இருந்து அகற்றி பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கும் பாதுகாப்புத் தரப்பினரை பணியில் அமர்த்துமாறு முஸ்லிம்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -