ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன முன்னிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவுப்பிரதேசசபை உறுப்பினராக முத்துலிங்கம் காண்டீபன் நேற்று(18) ஞாயிற்றுக்கிழமை சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில் மு.காண்டீபன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இவருடன் ஸ்ரீல.சு.கட்சியின் காரைதீவுப்பிரதேச அமைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தியும் சமுகமளித்திருந்தார்.
காரைதீவுப்பிரதேசசபைக்கான மற்றுமொரு ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினராக எ.என்.யாகீர் சத்தியப்பிரமாணமெடுத்தார். இவர் ஸ்ரீல.சு.கட்சியின் காரைதீவுப்பிரதேச முஸ்லிம் பிரதேச அமைப்பாளராவார்.
காரைதீவு வரலாற்றில் முதற்றடவையாக இம்முறை 67 வாக்குகளைப்பெற்று 2 உறுப்பினர்களைப்பெற்றுக்கொண்டது. மாளிகைக்காடு வட்டாரத்தில் யாகீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விகிதாசாரமுறையில் மு.காண்டீபன் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
நேற்றையதினம் 1300உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணமெடுத்தமை தெரிந்ததே.