அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு வாழ் படித்த இளைஞா் யுவதிகளுக்கு கனணிப் பயிற்சி நெறிகளை-அகில இலங்கை வை.எம்.எம். ஏ யும் பாக்கிஸ்த்தான் துாதுவா் ஆலயம் இணைந்து நடாத்திவருகின்றனா். இதன் மூலம் தெமட்டக்கொடை அளுத்கடை மருதானை வாழ் வறிய மாணவா்கள் 90 பேர் நன்மையடைந்துள்ளனா்.
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தின் அனுசரணையில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையினால் நடாத்தப்படும் கனணி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 90 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை(01) தெமட்டகொடை பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் பிரதித்தூதுவர் ஜஹான் பாஸ் கான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர் ஒருவருக்கு பதக்கம் அணிவிப்பதையும் கௌரவ அதிதி சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர், இலங்கை-பாகிஸ்தான் நற்புறவுச் சங்க தலைவர் இப்திகார் அஸீஸ், வை.எம்.எம்.ஏ தலைவர் எம்.என்.எம்.நபீல் மற்றும்
சட்டத்தரணி அஷ்ரப் ரூமி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருப்பதையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.



