கந்தளாய் இளைஞர் கழகங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் 245 புள்ளிகளைப் பெற்று அல் தாரிக் இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு


எப்.முபாரக் -
திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் மற்றும் குழு போட்டிகளில் 245 புள்ளிகளைப் பெற்று கந்தளாய் பிரதேச இளைஞர் கழக சம்பியனாக அல் தாரிக் இளைஞர் கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

 160 புள்ளிகளைப் பெற்று கந்தளாய் மத்திய இளைஞர் கழகமும்,பரமேஸ்வரா இளைஞர் கழகம் 60 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. சனிக்கிழமை (24) கந்தளாய் லீவாரத்தின பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டி நிகழ்சிகளின் போதே அதிகூடுதலான புள்ளிகளைப்பெற்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. 
 தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கந்தளாய் இளைஞர் கழக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. சம்பியன் கிண்ணத்துடன் அல் தாரிக் இளைஞர் கழக வீரர்கள் வெற்றிக்களிப்பில் காணப்படுவதோடு,நூறு,இருநூறு மீற்றர் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் முதலாம் இடத்தினை பெற்ற வீரருக்கு விசேட கிண்ணம் கையளித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -