விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டப்பள்ள 21பேருக்கும் பிணை! முன்நகர்வு மனுவினை ஏற்று நீதிவான் உத்தரவு:16 திகதி தவணை!

காரைதீவு நிருபர் சகா-

ட்டப்பள்ள இந்துமயான விவகார ஆர்ப்பாட்டத்தின்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டப்பள்ள 21பேரும் (05) திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று அந்த மக்கள் சார்பில் சட்டத்தரணிகளான சந்திரமணி சிவரஞ்சித் ஜெகநாதன் ரமணா, மற்றும் ஆர்த்திகா உள்ளிட்ட அறுவர் ஆஜராகி முன்நகர்வு மனுவினை சமர்ப்பித்து வாடினர்.

அந்த முன்நகர்வுமனுவை ஏற்றுக்கொண்ட நீதிவான் 14நாள் விளக்கமறியல் தீர்க்கப்பட்டிருந்த 21பேரையும் பிணையில் விடுதலைசெய்ய உத்தரவு பிறப்பித்தார்.

எதிர்வரும் 16ஆம் திகதி 23பேரும் மன்றில் ஆஜராகவேண்டுமென தவணைத்திகதியையும் அவர் அறிவித்தார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரியை மன்றிற்கு வரவழைத்து நீதிவான் அறிவுறுத்தியபின்னர் பிணைமனுமீதான உத்தரவு வழங்கப்பட்டது.

அச்சமயம் நீதிமன்றிற்கு வெளியே அட்டப்பள்ள மக்கள் அரசியல்வாதிகள் என பெருந்திரளானோர் பலத்த எதிர்பார்ப்புடன் கூடியிருந்தனர்.

நீதிவானின் உத்தரவை அங்குநின்ற மக்கள் மாத்திரமல்ல சம்பந்தப்பட்ட அனைவருமே எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தமையைக் காணக்கூடியதாயிருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை(27) அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர்ப்பிரதேசத்துக்குட்பட்ட அட்டப்பள்ளம் இந்துமயானத்தை ஒரு நபர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டத்திலீடுபட்டமையும் அங்கு பதட்டம் நிலவியமையும் தெரிந்ததே.

அந்த ஆர்ப்பாட்டத்தின்போது உதவிபிரதேச செயலாளரும் கிராம சேவையாளரும் தாக்கப்பட்டனர் எனக்கூறி பொலிசில் முறையிடப்பட்டது. பிரஸ்தாப இரு அலுவலர்களும் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி ஆர்ப்பாட்டத்தின்போது தாக்குதலில் ஈடுபட்டனரென்ற சந்தேகத்தின்பேரில் 23பேரின் பெயர்கள் பொலிசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன்பிரகாரம் அவர்கள் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு பெண்கள் இருவரைத்தவிர ஏனைய 21பேரும் 14நாள் விளக்கமறியலில் தீர்க்கபட்டிருந்தமை தெரிந்ததே.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -