மாபெரும் இலவச வைத்திய முகாம்



பைஷல் இஸ்மாயில் –

ட்டக்களப்பு – காத்தான்குடியில் அமையப்பெற்ற ஜே.எம்.தனியார் வைத்தியசாலையினால் மாபெரும் இலவச வைத்திய முகாம் ஒன்றினை எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தவுள்ளதாக அதன் முகாமைத்துப் பணிப்பாளர் ஜாபிர் சாலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி இந்த இலவச வைத்திய சேவையினை முற்றிலும் இலவசமாக நடாத்தவுள்ளதாகவும்
இச்சேவை காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரசித்தி பெற்ற நிபுணர்களான சிறுவர் வைத்திய நிபுணர், மகப்பேறு நிபுணர், நரம்பியல் நிபுணர், கண் வைத்திய நிபுணர், காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர், என்பு முறிவு வைத்திய நிபுணர்களுடன் விஷேடமாக நோய் தடுப்பலாற்றலியல் நிபுணர் உள்ளிட்ட பல வைத்திய நிபுணர்களைக் கொண்டு இந்த இலவச வைத்திய முகாமினை நடாத்தவுள்ளதாகவும், அன்றைய தினம் நீரிழிவு நோய்க்கான இரத்தப் பரிசோதனை, பெண்களுக்கான மார்பக புற்று நோய்ப் பரிசோதனை போன்ற பல வைத்திய பரிசோதனைகளுடன் அவர்களுக்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகளும் இலவசமாக வழங்கி வைக்கப்படவுள்ளன.

கடந்த காலங்களில் அஸ்டர் என்ற பெயரில் காத்தான்குடியில் இயங்கி வந்த இந்த வைத்தியசாலை அதே இடத்தில் ஜே.எம் வைத்தியசாலை என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்ட சாதனங்கனைக் கொண்டு மிகவும் துல்லியமான முறையில் பல புதிய சேவைகளை மக்கள் நலன் கருதி வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -