துரும்புச்சீட்டானார் சுலைமாலெவ்வை! அதிஸ்ட்டம் இப்படித்தான் வரவேண்டும்!


காரைதீவுநிருபர் சகா-

13உறுப்பினர்களைக்கொண்ட பிரதேசசபைத் தேர்தலில் வெறும் 801 வாக்குகளைப்பெற்ற வேட்பாளர் ஒருவர் சபையைத்தீர்மானிக்கவுள்ளார்.

இந்த நிலைமை அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர் பிரதேசசபைக்கு ஏற்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேசசபைக்கான தேர்தலில் ஜக்கியதேசியக்கட்சி 7ஆயிரத்து931 வாக்குகளைப்பெற்று 6ஆசனங்களையும் அ.இ.ம.காங்கிரஸ் 7260 வாக்குகளைப் பெற்று அதே 6ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது
ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சி 1304வாக்குகளைப்பெற்று 1ஆசனத்தைப் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் மீராநகர் 2ஆம் வட்டாரத்தில் போட்டியிட்ட சு.கட்சி அமைப்பாளர் வை.எல்.சுலைமாலெவ்வை 801 வாக்குகளைப்பபெற்று 3வது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவரே தற்போது 12ஆசனங்களை வைத்திருக்கும் எதிரும் புதிருமான இரு கட்சிகளுக்கு துரும்புச்சீட்டாக மாறியுள்ளார். அவரே ஆட்சியைத்தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புமுறை தேர்தல்முறைமையில் ஒரு பிரதிபலிப்பு இது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -