கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களினால் மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்பட்ட இந்நிகழ்வானது கடல் கடந்து கத்தாரில் நாலாபுரங்களிலும் பறந்துவாழும் முனையூர் உள்ளங்களை ஒன்று சேர்த்த உறவுப்பாலமாக இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்களினால் இவ்வரிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திதந்த Gulf Federation for Kalmunai (GFK) அமையத்தினை வாழ்த்தி வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலை ஒன்பது மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக இவ் ஒன்றுகூடலினது முக்கியத்துவம் மற்றும் நிகழ்ச்சி நிரல் என்பன தொடர்பில் அவையில் விளக்கமளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மூன்று இல்லங்களாக (சிவப்பு, பச்சை, மஞ்சள்) அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்டு இவ் இல்லங்களிற்கிடையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். சிவப்பு நிற அணியினர் 168 புள்ளிகளினைப்பெற்று இவ்வருடத்திற்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் பச்சை நிறம் மற்றும் மஞ்சள் நிற அணியினர் 167 மற்றும் 153புள்ளிகளை பெற்று முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களினை பெற்றுக்கொண்டனர். கத்தாரில் குடும்ப சகிதம் வசிக்கும் பலர் குடும்ப சகிதம் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்ததுடன் சிறுவர்களுக்கான விசேட விளையாட்டுக்களும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்வின் இறுதியில் வெற்றியீட்டிய இல்லத்திற்கு பரிசில்கள் வழங்கி கவ்ரவிக்கப்பட்டன.
குறுகிய கால அழைப்பினை ஏற்று இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்வதுடன் எதிர்வரும் காலங்களில் கல்முனைக்கான வளைகுடா அமையத்தினால் (GFK) நடாத்தப்படும் அனைத்து செயற்றிட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டப்பட்டதுடன் சலவாத்துடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.