ஜனாதிபதியினது தீர்மானத்திற்கமைவாக எந்தக்கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கத்தயார்!


காரைதீவு நிருபர் சகா-
ட்சித்தலைவராகிய ஜனாதிபதியினதும் கட்சியினதும் தீமானத்திற்கமைவாக நாம் எந்தக்கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கத் தயார்
என்று சம்மாந்துறை ஸ்ரீலசு.கட்சி அமைப்பாளர் யாசீன்பாவா முகம்மது முஸம்மில் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேசசபைத் தேர்தலில் 8ஆசனங்களை ஜ.தே.கட்சியும் 8ஆசனங்களை அ.இ.ம.காங்கிரசும் 4ஆசனங்களை ஸ்ரீல.சு.கட்சியும் பெற்றுக்கொண்டன. எனவே ஆட்சியமைக்கப் போதுமான ஆசனங்கள் எந்தக்கட்சிக்குமில்லை. ஆதலால் அடுத்த பெரும் சக்தியாகவிளங்கும் சு.கட்சி ஆட்சியமைப்பது தொடர்பில் எவ்வாறு நடந்துகொள்ளும் என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

சம்மாந்துறை பிரதேசசபைக்கான தேர்தலில் 4ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு 1122 வாக்குகளைப்பெற்ற அமைப்பாளர் முஸம்மில் சு.கட்சி வேட்பாளர்களிடையே கூடுதல் வாக்குகளைப்பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறைச் சரித்திரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிகூடிய 6920 வாக்குகளைப் பெற்றதும் இம்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

இந்தத்தேர்தலில் எமது கட்சிக்கு வரலாற்றில் ஒருபோதுமில்லாதவாறு 6920 வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். வரலாற்றில் இம்முறை என்னில் நம்பிக்கைவைத்து அதிகளவான வாக்குகளை அள்ளிவழங்கியுள்ளனர். முதற்கண் சம்மாந்துறை மக்களுக்கு எமது நன்றிகள்.
எதிர்வரும் காலங்களிலும் இவ்வாதரவு பெருகி அடுத்த முறை பிரதேசசபையை நாமே கைப்பற்றுவோம்.

மக்களது வாக்குகளுடாக 4 உறுப்பினர்கள் எமது கட்சியில் தெரிவாகியுள்ளனர். எமது மக்களின் பாதுகாப்பு இருப்பு அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு தொடர்ந்து நாம் பயணிப்போம்.

எமக்கான பொது எதிரியாக இருப்பது மு.காவும் அதன் தலைவருமே.அதையிட்டு நாம் கவனமாயிருப்போம்..எனது கடந்தகால சேவைகளை மக்கள் அறிவார்கள். அவை தொடரும்.
வரலாற்றில் முதற்றடவையாக கூடிய வாக்குகள் கிடைக்கப்பபெற்றிருப்பது எமது மக்களின் மனமாற்றத்தையும் அபிவிருத்தியின்பால் மக்களுக்குள்ள தாகத்தையும் வெளிப்படுத்திநிற்கிறது. என்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -