நேர்மையான தலைமைத்துவத்துக்கு சிப்லி பாறூக் ஒரு எடுத்துக்காட்டாகும்-மர்சூக் அகமட் லெவ்வை

எம்.எஸ்.எம்.நூர்தீன்-

நேர்மையான ஒரு இளம் தலைவராக பொறியியலாளர் சிப்லி பாறூக் திகழ்கின்றார் என காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சூக் அகமட் லெவ்வை தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று நடைபெற்ற முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் நமது சமூகத்தின் குரலாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் திகழ்கின்றார்.

அவருடைய மாகாண சபை உறுப்பினர் பதவிக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒவ்வொரு அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலும் முஸ்லிம் சமூகத்தின் குரலாக திகழ்ந்தார்.

நமது சமூகம் எதிர் கொள்ளும் சவால்கள் குறிப்பாக காத்தான்குடி எல்லைப்பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அதே போன்று பாலமுனை காங்கேயனோடை உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்கள் சந்தித்த பல் வேறு பிரச்சினைகளை அடையாளப்படுத்தி வெளியில் கொண்டு வந்தவர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கேயாகும்.

இவ்வாறு இந்த சமூகத்தின் குரலாக செயற்பட்டு வரும் அவர் ஒரு நேர்மையான இளம் தலைவராகும்.

நேர்மையான ஒரு தலைமைத்துவமாக அவர் இருக்கின்றார். அவரின் நேர்மையை சிலர் உரசிப்பார்க்க முயல்கின்றனர்.

ஒரு போதும் அவர் இந்த சமூகத்தின் வரிப்பணத்தை துஷ்பிரயோகம் செய்து தனது பக்கட்டுக்களை நிரப்பிக் கொள்ளமாட்டார்.

அவருடைய மாகாண சபை உறுப்பினர் காலம் என்பது பலருக்கும் பல உதவிகளையும் செய்தார். பதவியில்லாத காலத்திலும் கூட உதவி செய்தே கொண்டே இருக்கின்றார்.

அப்படியான இவரை தோற்கடிக்கச் செய்வதற்கு சிலர் சதி முயற்சிகளை திறைமறைவில் செய்து வருகின்றனர்.

மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -