பெண்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை குறைக்கும் எண்ணம் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த தேர்தலின் மூலம் 535 பேர் வெற்றிபெற்றுள்ளனர். இதில் 1.9 வீதத்திலிருந்து 10 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அந்தந்த மாவட்டங்களுக்கு அமைவாக கீழ்க்கண்ட வகையில் பெண்களின் எண்ணிக்கை வாக்குகள் மூலம் வெற்றிபெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
மாவட்டங்கள் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை
கொழும்பு 54
கம்பஹா 28
களுத்துறை 33
கண்டி 28
மாத்தளை 18
நுவரெலியா 26
காலி 32
மாத்தறை 27
ஹம்பாந்தோட்டை 16
யாழ்ப்பாணம் 21
கிளிநொச்சி 4
மன்னார் 3
வவுனியா 4
முல்லைத்தீவு 4
மட்டக்களப்பு 8
அம்பாறை 26
திருகோணமலை 7
குருநாகல் 45
அனுராதபுரம் 31
பொலநறுவை 9
பதுளை 24
மொனறாகலை 13
இரத்தினபுரி 32
கேகாலை 26
புத்தளம் 16
எல்ப்பிட்டிய பிரதேச சபைக்கான 17 பேர் தவிர்ந்த ஏனைய உள்ளுராட்சி மன்றங்களுக்கான 5075 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார் .
இந்த தேர்தல் மூலம் அனைத்து வட்டாரத்திலும் 5 சதவீதத்திற்கு குறைவான வாக்குவீதத்தை பெற்ற அனைவரதும் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படுமா என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர் ஆம் என்று தெரிவித்தார்.
எல்பிட்டிய பிரதேசசபைக்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு இருப்பதுடன் இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏனைய உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
எல்பிட்டிய பிரதேசசபைக்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு இருப்பதுடன் இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏனைய உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.