வைத்திய கலாநிதி நாகூர் ஆரீபின் முகநூலில் இருந்து.....
கிரீடம் ஏற்றிய மண்ணே மண் கவ்வ வைத்திருக்கிறது.
உங்களின் சாணக்கியம் எங்களின் மருதூர் விடயத்தில் தோற்றுப்போய் விட்டது.
இத்தனை அரசியல் அனுபவம் உள்ள நீங்கள் இந்த விடயத்தில் நிதானம் தவறி சரியான போக்கை அடையாளம் காணத்தவறி விட்டீர்கள் அல்லது பிறரின் பிழையான தகவல்களினால் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
எந்தக் கட்சிகளையும் அழிக்கும் எண்ணம் எங்களின் ஊருக்கில்லை. முடிவுகள் எதுவும் முடிவல்ல. தடைக்கற்கள் படிக்கற்களாக மாறலாம்.
ஆனால், அது தானாக நடக்காது, பொய்யாகவும் நடக்காது.
வீழ்ந்த இடத்திலிருந்து தான் எழும்ப வேண்டும். அதுகூட முயற்சிக்காமல் எழும்ப முடியாது.
எங்களின் இலக்கு எமக்கான நகர சபையே!
அள்ளாஹ்வின் உதவியோடு, பல சவால்களுக்கு மத்தியில் எமது மக்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.
இடைவெளி அதிகரித்தால் ஒட்டவைப்பது கடினமாகும்.
உங்களின் இறுகிய மனதைத் தளர்த்துங்கள். வீழ்ந்த இடத்திலிருந்து எழும்புவதற்கு முயற்சியுங்கள்.
எமது மக்கள் மன்னித்து மறக்கவும் பின்வாங்கமாட்டார்கள். அதற்குரிய கதவைத் திறக்கவேண்டியது உங்களின் பொறுப்பு.
மருதூரின் எழுச்சி உங்களின் வீழ்ச்சி என்று நான் என்றோ ஆரூடம் கூறினேன். நீங்கள் தப்புக்கணக்குப் போட்டீர்கள். அதன் பலனை அம்பாறை மாவட்டம் எங்கிலும் எதிர்நோக்குகிறீர்கள்.
பிடிவாதம் தளர்த்துங்கள். எங்களின் விடயத்தில் அவசரமான தீர்க்கமான முடிவொன்றை எடுங்கள்.
அதுவே வரும் நாட்கள் வசந்தமாக இருப்பதற்கு உத்தரவாதமாகும்.
உள்ளூராட்சி சபையே எமது இலக்கு!
ஒற்றுமையே நமது பலம்!
