பொலிஸ் நிலைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை....

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் ஆர்பாட்டங்களை மேற்கொண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை, கிரிந்திவல மற்றும் மாதம்பை ஆகிய பகுதிகளில் ஆர்பாட்டங்களை முன்னெடுத்தவர்கள் குறித்தே அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஆர்பாட்டங்களை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த போதிலும் ஆர்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனை தடுப்பதற்கு பொலிஸார் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய பொலிஸ் தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைவாக குறித்த பகுதிகளில் இடம்பெற்ற ஆர்பாட்டங்களை தடுத்து நிறுத்துவதற்கு உரிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -