எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகடந்த வெள்ளிக்கிழமை ( 23 ) பாடசாலை மைதானத்தில் அதிபர்.திரு.கே.தம்பிராஜா தலைமையில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.
இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் விவேகானந்தர் இல்லம் (பச்சை ) 688 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், இராமகிருஸ்ணர் இல்லம் ( நீலம் )682 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், 600 புள்ளிகளைப் பெற்று விபுலானந்தர் இல்லமும் ( சிவப்பு ) நாவலர் இல்லமும் ( மஞ்சள்) மூன்றாம் இடங்களையும் பெற்றுக் கொண்டன.
இறுதிநாள் விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம்.உதயகுமார் பிரதம அதிதியாகவும் ,மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்ணம் ,ஆதார வைத்தியசாலை, களுவாஞ்சிகுடி, வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கு.சுகுணன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் பட்டிருப்பு கல்வி வலயம் ,களுவாஞ்சிகுடி உடற்கல்வி உதவிகல்விப் பணிப்பாளர் திரு.ரி.இதயகுமார், மண்முனை தென் எருவில்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.வி.திரவியராஜா, மட்டக்களப்பு கல்வி வலய ஓய்வுநிலை உதவி கல்விப் பணிப்பாளரும் பட்டிருப்பு தேசிய பாடசாலை ,களுவாஞ்சிகுடியின் முன்னாள் அதிபருமான திரு.பொன் வன்னியசிங்கம், களுவாஞ்சிகுடி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு.எல்.ஆர்.குமாரசிறி , மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படை முகாம் களுவாஞ்சிகுடி,கட்டளை அதிகாரி திரு.ஏ.டி.ஜி.பி.அமரசிங்க ஆகியோர் விசேட அதிதிகளாகவும் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு.கே.யோகநாதன் ,பழைய மாணவர் சங்க பிரதிநிதி திரு.கே.நாகேந்திரன் அகியோர் அழைப்பு அதிதிகளாகவும் களுவாஞ்சிகுடி கிராமத் தலைவர் திரு.அ.கந்தவேள் ,பட்டிருப்பு கிராமத் தலைவர் திரு.கி.குணபாலன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதிதிகள் பாடசாலை பாண்ட் வாத்தியக்குழு, பாடசாலை அதிபர் ,பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ,கல்விசாரா உத்தியோஸ்தர்கள் ,இணைந்த அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் ,மாணவத் தலைவர்கள், இல்ல மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,சாரணர்கள் ,சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் படையினர் , சுற்றாடல் முன்னோடி கழக மாணவர்கள், கனிஸ்ட பாண்ட வாத்தியக்குழு ,பாடசாலை பெரு விளையாட்டுக்குழுக்கள் என்பவற்றால் வரவேற்கப்பட்டதுடன் விளையாட்டுக்குழு மாணவர்கள் ஒலிம்பிக் தீபத்தையும் ஏற்றி வைத்தனர்.
இவ் இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்குமான சகல ஏற்பாடுகளையும் பாடசாலை அதிபர் திரு.கே.தம்பிராஜா தலைமையிலான பிரதி அதிபர்களான திரு.த.ஜனேந்திரராஜா , திரு.நா.நாகேந்திரன், திரு.எஸ்.சுவேந்திரராஜா ,போட்டி இணைப்பார் திருமதி.இ.வரதராஜன் ,போட்டி செயலாளர் திரு.செ.சுரேந்திரன் ,போட்டி இணைச்செயலாளர் திரு.தி.கௌரீசன் ஆகிய உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் ,பொருளாளர் திரு.வெ.தில்லைநாதன் ,செயற்குழு உறுப்பினர்களான திரு.சீ.சிவசங்கரலிங்கம் ,திருமதி சு.அமிர்தலிங்கம் ,திருமதி அ.தவராஜா, திரு.பா.கமலநாதன், திருமதி மா.இன்பராசா ,திரு.கி. குமாரசிங்கம் ,திரு.செ.நரேந்திரநாதன் ,திருமதி வி.பார்த்திபன், திரு.ஆர்.சூரியகுமார், திரு.எஸ்.சிவதாசன், திரு.க.கருணாகரன், திரு.வி.ரவீந்திரமூர்த்தி, திரு.ம.சுகிர்தராஜ் ,திரு.கே.கோவண்ணன் ,செல்வி.ம.டிலானி ,திருமதி.கி.குணவர்த்தன, திருமதி.யோ.நித்தியானந்தன் ஆகியோரும் அபிவிருத்தி உத்தியோஸ்தர்களும் கல்விசாரா உத்தயோஸ்தர்களும் மாணவத் தலைவர்களும் மேற்கொண்டிருந்தனர்.