இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நேற்று முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவம் ஒன்று அம்பாறைநகரில் பதிவாகியுள்ளது. இது இனங்களுக்கிடையிலான பிரச்சினைஎன்பதை விட, அரசியல் காய் நகர்த்தலின் ஒரு அங்கம் எனலாம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய காலத்தில்அளுத்கமை சம்பவம் ஒன்றே முஸ்லிம்களுக்கு எதிரானநடைபெற்றிருந்தது. இந்த நல்லாட்சி அரசில் பல அளுத்கமை போன்றசம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன. முஸ்லிம்களின் ஆதரவு என்னவோஇவ்வரசுக்குத் தான் உள்ளது.
நேற்று அம்பாறையில் இடம்பெற்ற சம்பவம் நன்கு திட்டமிடப்பட்டது.அக் கடைக்கு அருகாமையில் காவல் நிலையம் அமையப்பெற்றிருந்தபோதும் அவர்கள் அதனை பாதுகாக்க முடியவில்லை. இதிலும்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை குற்றம் சுமத்த சிலர்வருவார்கள். இன்றும் காவல் நிலையங்களுக்கு உத்தரவிடும் அதிகாரம்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்குள்ளதா? இது போன்றுதான், கிந்தோட்டை கலவரத்தின் போதும் பாதுகாப்பு படை அதிகாரிகள்இனவாதிகளுக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு இடம்பெற்றிருந்த கிந்தோட்டை கலவரம் உட்படமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நீதியை நிலைநாட்டியிருந்தால், இவ்வாறான சம்பவங்களை செய்பவர்களுக்குஅச்சத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இதுவரை இந்த அரசு எடுத்தஉருப்படியான ஒரு நடவடிக்கையையாவது குறிப்பிட முடியுமா?இவ்வாறான நிகழ்வுகளில் போது, இனவாத வன்முறைகளை கையில்எடுத்தவர்களை விட்டு விட்டு, முக நூலில் பதிவிட்ட ஒரு முஸ்லிம்வாலிபரே தண்டிக்கப்பட்டுள்ளார். இதுவே இவ்வரசு நீதியை நிலைநாட்டும் விதமாகும்.
என்னை பொறுத்தமட்டில் அளுத்கமை சம்பவத்துக்கு கூட, நீதியைநிலை நாட்டும் கடமை இவ்வரசுக்குத் தான் உள்ளது. அது இடம்பெற்றுமுடிந்த சில மாதங்களிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருந்தது. இவ்வாறானவன்முறைகளில் ஈடுபடும் யாராக இருந்தாலும், எந்தவிதமானதயவுக்களுமின்றி கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தல்வேண்டும் என குறிப்பிட்டார்.