நிலவும் வெற்றிடங்களைப் பொறுத்தே ஆசிரியர் நியமனங்கள் கிழக்கு பட்டதாரிகளுக்கு வழங்கப்படவுள்ளன.


கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழு தெரிவிப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்குதலில் எவ்வித பாரபட்சம் பாகுபாடுகளின்றியே நியமனங்கள் வழங்கப்பட்டன தற்போதும் வழங்கப்படவுள்ள நிலையில் இருக்கின்றது இதில் யாருக்கும் அநீதிகள் இழைக்கப்படவில்லை என இன்று (26) கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ் சிங்கள மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் எண்ணிக்கையைப் பொறுத்தே வெற்றிடங்கள் நிரப்பப் படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் சிங்கள தமிழ் மொழிகளில் பாடசாலை கல்விகள் காணப்படுகின்றன இதனையும் கருத்திற்கொண்டும் நிலவும் ஆசிரியர்களுக்கான பாடங்கள் வெற்றிடங்கள் மொழி என்பவற்றையும் கொண்டே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன வழங்கப்படவும் இருக்கின்றன மேலும் கடந்த டிசம்பர் மாதமளவில் திருகோணமலையில் வைத்து மொத்தமாக 1127 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன இதில் 945 தமிழ் மொழி மூல பட்டதாரிகளும் 168 சிக்கள மொழி மூலமான பட்டதாரிகளுக்கும் 14 ஆங்கில மொழி மூலமான பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன இவ்வாறாக நியமனங்கள் நிலவும் வெற்றிடங்களைப் பொறுத்தே நியமனங்கள் வழங்கப்பட்டன .இது தவிர எதிர் வரும் 3ம் திகதி மார்ச் மாதமளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம பங்கேற்புடன் மேலும் 300 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வைத்து வழங்கப்படவுள்ளன இதில் 222 சிங்கள மொழி மூலமான பட்டதாரிகளுக்கும் 78 தமிழ் மொழி மூலமான பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்கள் நிலவும் வெற்றிடத்தை கொண்டு வழங்கப்படவிருக்கின்றதாக மேலும் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -