தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு குறித்த விடயம் தொடர்பாக விசேட ஊடக அறிக்கையொன்றினை அனுப்பிவைத்திருந்தார்.
குறித்த ஊடக அறிக்கையில்,
வட்டாரங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நிறைவடைந்து பெறுபேறுகள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தொலைநகல் மற்றும் தொலைபேசி மூலமாக கிடைக்கப்பெற்றிருந்த நிலையில்.குறித்த பெறுபேறுகளை தபால் மூல வாக்களிப்பு முடிவுகளுடன் இணைத்து வெளியிடவேண்டியிருந்தது.
சில மாவட்ட செயலகங்களில் இருந்து பூரண தேர்தல் முடிவுகள் கிடைக்காமையினாலும் முழுமையான பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தெரிவத்தாட்சி அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்தோடு வெளிவந்த வட்டார முடிவுகளை கணனி மயப்படுத்தி தரவுகட்டமைப்புக்கள் இணைக்க வேண்டியிருந்தது.
அதன் காரணத்தாலேயே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு கால அவகாசம் தேவைப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
