தென் கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் உயிர் முறைமைகள் தொழிநுட்பவியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2015/2016 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களினால் பண்ணை செய்கை மூலம் மேற் கொள்ளப்பட்ட நெற்பயிர் செய்கை மற்றும் ஏனைய பயிர் வகைகள் 2018.02.22 ஆம் திகதி அறுவடை செய்யப்பட்டது.
தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி.முகம்மட் தாரீக் தலைமையில் பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான சம்மாந்துறை பிரதேச மல்வத்தை எக்ரோ டெக் பார்க்கில்(AgroTech Park) நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பல்கலைக் கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் கலந்து கொண்டார்.
தென் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களின் முயற்சியினால் புதியதாக தொழில்நுட்பவியல் பீடம் ஒலுவில் மஹாபொல நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்பீடத்தின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் மாணவர்களின் பண்ணை செய்முறை பயிற்சிக்காக மல்வத்தை எக்ரோ டெக் பார்க் அபிவிருத்தி செய்யப்பட்டு உபவேந்தர் பேராசிரியர் நாஜிம் அவர்களது ஆலோசனை மற்றும் சிறந்த வழிகாட்டலில், தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி தாரீக் அவர்களின் மேற்பார்வையில் உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி பி.ஜி.என்.செவ்வந்தி தலைமையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
இப்பீடம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது இப்பீடத்தில் சுமார் 310 க்கு மேற்பட்ட மூவினத்தையும் சேர்ந்த மாணவர்கள் Bio systems Technology மற்றும் Information And Communication Technology போன்ற கற்கை நெறிகளை கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.