ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மரச்சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ள வாஸ்தீன் யார் என்பதனை மக்கள் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். முக்கியமாக நாபீர் பெளண்டேசனாது கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பட்ட இடங்களிலும் பல வகையான வேலை திட்டங்களை இன,மத,மொழி வேறு பாடுகளுக்கு அப்பால் செய்து வருகின்றது.
அந்தவகையில் ஏற்கனவே கல்குடா பிரதேசத்திற்காக எங்களால் நியமிக்கப்பட்ட அமைப்பாளரினால் திறம்பட கடமையாற்ற முடியாது போனதினால் எமது வேட்பாளர் வாஸ்தீனின் வெற்றிக்கு பிற்பாடு நாபீர் பெளண்டேசனானது தனது சகல சமூக சேவைகளையும் பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் வாஸ்தீன் ஊடாக செய்து தரும் என்பதை இக்கூட்டத்தில் உறுதி அளிக்கின்றேன் என சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் உதுமான் கண்டு நாபீர் நேற்று 07.01.2018 புதன் கிழமை பிறைந்துறைச்சேனையில் வாஸ்தீனை ஆதரித்து இடம் பெற்ற கூட்டத்தில் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கூட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள் அடங்களாக பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீருடைய உரையின் சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
வீடியோ -
