இலங்கை ரூபவாகினி கூட்டத்தாபனத்தின் புதிய நல்லிணக்க அலைவரிசை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அமைச்சர் மனோ கணேசன் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
இலங்கையில் 19 இனக் குழுக்கள் வாழ்ந்து வருகின்றன. தெற்கில் இருந்தும், வட பகுதியிலிருந்தும் நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன குறிப்பிடுகையில்,
இலாப நோக்கம் இன்றி, நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர்களான லஸந்த அழகியவண்ண, கருணாரட்ன பரணவிதான, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தி எம்.பாரூக் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.