கிட்ஸ் பன் கிளப்(Kids Fun Club) மூன்றாவது ஆண்டாகாவும் ஏற்பாடு செய்திருந்த சிறுவா்கள் மகிழ்ச்சியும் கண்காட்சி தெஹிவளை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (25.02.2018) நடைபெற்றது.
பிரதம அதிதியாக முன்னாள் தெஹிவளை கல்கிஸை மேயர் தனசிறி அமரதுங்கவும் அவரின் பாரியாரும் கௌரவ அதிதியாக சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் கலந்துகொண்டு வரவேற்கப்படுவதையும் அதிதிகள் தேசியக்கொடியேற்றி கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதையும் கிட்ஸ் பன் கிளப்பி ன்தலைவி நஸ்லியா றஷீட்இ செயலாளர் நஸ்லியா உமர் ஆகியோர்கள் அருகில் காணப்படுவதையும் கண்காட்சி கூடங்களையும் சிறுவர்களின் நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.





