கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் தேர்தல் கருத்தரங்கு


அகமட் எஸ். முகைடீன்-

ள்ளுராட்சி மன்றதெர்தல் 2018இல் கல்முனை மாநகர சபையின் 15ஆம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி றோசன் அக்தாரை ஆதரித்து இன்று (5) திங்கட்கிழமை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் தேர்தல் கருத்தரங்கு கல்முனை கிறீன் பீல்ட் முகாமைத்துவ குழுத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். கபூல்ஆஷாத் தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், வர்த்தக வானிபத்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் செயலாளராக கடமையாற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏ. கபூர், கல்முனை மசூரா குழுத் தலைவர் அல்ஹாஜ் யு.எல். கரீம், 15ஆம் வட்டார வேட்பாளர் சட்டத்தரணி றோசன் அக்தார் உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபதை; தேர்தலில் போட்டியிடும் கல்முனை பிரதேச வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -