வவுனியா மாவட்ட வரையறுக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரசபையின் விகிதாசார விருப்பத்திற்குரிய வேட்பாளர் சி.இரவீந்திரன் அவர்களின் தலைமையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம் நேற்றைய தினம் (30/01/2018) மாலை 06.30 மணியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரசபை வேட்பளார் சு.காண்டீபன் அவர்களின் வட்டார அலுவலகத்தில் நடைபெற்றது.
இப் பிரச்சார கூட்டத்தின் சிறப்பு பேச்சாளர்களாக வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா நகரசபை முன்னாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.