தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
ஓரு வாக்கெடுப்பு நிலையத்தினுள் தரித்துநிற்க ஒருகட்சி அல்லது குழு சார்பாக இரு முகவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வாக்கெடுப்பு காலை 7மணிமுதல் மாலை 4மணிவரை தொடர்ந்து நடைபெறும்.
அதேவேளை வாக்கெடுப்பு நிலையத்தினுள் தரித்துநின்று கண்காணிப்பதற்கு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட கண்காணிப்பு அமைப்புகளுக்கு மாத்திரம் ஓர் அமைப்பிலிருந்து ஒரு கண்காணிப்பாளர் என்ற விகிதத்தில் அனுமதிக்கமுடியும்.
ஆனால் இவர்கள் எந்தவிதத்திலும் வாக்கெடுப்புநிலைய நிருவாகத்தில் தலையிடமுடியாது.
வாக்கெடுப்பு நிலையத்தினுள் வரும் வாக்காளர்களுடன் முகவர்கள் உரையாடவோ நடமாடவோ சைகை காட்டவோ முடியாது. அடிக்கடி வெளியே செல்லமுடியாது.
ஆயுதம் தீ கமெரா கையடக்கத்தொலைபேசி என்பவற்றை வாக்குச்சாவடியினுள் பயன்படுத்துமுடியாது.
நடமாடும் கண்காணிப்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எழுத்துமூல அனுமதிவழங்கப்பட்ட கண்காணிப்பாளர் மட்டும் சாவடியனுள் வரமுடியும். அவர்கள் வாக்கெடுப்பு பணிகளில் இடையூறு ஏற்படாவண்ணம் நடந்துகொள்ளவேண்டும்.
ஆனால் கண்காணிப்பாளர்களின் வாகனங்கள் வாக்கெடுப்பு வளாகத்தினுள் அனுமதிக்கப்படமாட்டாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
